2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

ஊடகவியலாளர் சுசில் கிந்தெல்பிட்டிய இன்று பிணையில் விடுதலை

Super User   / 2010 ஜூன் 11 , மு.ப. 08:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் வேட்பாளரும், ஊடகவியலாளருமான சுசில் கிந்தெல்பிட்டிய இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

சுசில் கிந்தெல்பிட்டிய கைது செய்யப்பட்ட வேளையில், அவரது வாகனத்தில் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டதை தான் காணவில்லை என்று  சுசில் கிந்தெல்பிட்டியவுக்கு எதிராக குறித்த பெண்மணி நீதிமன்றத்தில் சாட்சியமளித்தை அடுத்தே இவர் விடுதலை செய்யப்பட்டார்.

நாடாளுமன்றத் தேர்தலிற்கு முன்னராக சுசில் கிந்தெல்பிட்டியவின் வாகனத்தில் ஆயுதம் இருந்ததாகவும், அவர் தன்னை அச்சுறுத்தியதாகவும்  பெண்மணி ஒருவர் செய்த முறைப்பாட்டை அடுத்து, சுசில் கிந்தெல்பிட்டிய பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--