2021 ஜனவரி 23, சனிக்கிழமை

எதிர்க்கட்சித் தலைவர் பதவி; ’ஐ.தே.கவே சிக்கலை தீர்க்க வேண்டும்’

Editorial   / 2019 நவம்பர் 22 , மு.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றத்தில், எதிர்க்கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுப்பது தொடர்பில் எழுந்துள்ள சிக்கலை, ஐக்கிய தேசியக் கட்சியே தீர்த்துக்கொள்ள வேண்டுமே தவிர, இது, நாடாளுமன்ற விடயதானங்களுக்கு உட்பட்டதல்லவென, சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.

நேற்று (21) முற்பகல் இடம்பெற்ற, கட்சித் தலைவர்களுடனான சந்திப்பின் போதே, சபாநாயகர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்படி, நாடாளுமன்றத்தில் எதிரணியில், அதிக எம்.பிக்களைக் கொண்டிருக்கும் கட்சியின் தலைவருக்கே எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிட்டுமென்று தெரிவித்த சபாநாயகர், எவ்வாறாயினும், இது தொடர்பில், கட்சியின் பொதுச் செயலாளரால், சபாநாயகருக்கு அறிவிக்கப்பட வேண்டுமென்றும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .