2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை

எமில், ரங்கஜீவவின் விளக்கமறியல் நீடிப்பு

Editorial   / 2018 செப்டெம்பர் 18 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறைக்கைதிகள்  27 பேர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவா மற்றும் பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவின் பரிசோதகர் நியோமால் ரங்கஜீவ ஆகிய இருவரையும் அடுத்த மாதம் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகநபர்கள் இருவரும் கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போதே நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

2012ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலைக்குள் இடம்பெற்ற மோதல் சம்பவத்தின் போது, 27 கைதிகள் உயிரிழந்தமைக் குறிப்பிடதக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X