2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

ஏப். 15வரை மின்சாரப் பிரச்சினை நீடிக்கும்

Menaka Mookandi   / 2016 ஏப்ரல் 01 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சாரப் பிரச்சினை இன்னமும் முடிவுக்கு கொண்டுவரப்படவில்லை. இந்நிலைமை, எதிர்வரும் 15ஆம் திகதிவரை நீடிக்கும் என்று மின்சக்தி பிரதியமைச்சர் அஜித் பி.பெரேரா தெரிவித்தார்.

மழை நீடிக்குமாயின் இந்தப் பிரச்சினைக்கு முடிவு கிடைக்கும் எனவும் விவசாயத்துக்கு வழங்கப்படும் நீரை, மின்னுற்பத்திக்கு வழங்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

தனியார்த் துறையினரிடமிருந்து மின்சாரத்தைப் பெற்றுக்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இதற்கமைய, 55 மெகாவோட் மின்சாரம் தனியார்த்துறையிடமிருந்து பெற்றுக்கொள்ளப்படும் என்றும் அஜித் பி.பெரேரா மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X