Editorial / 2026 பெப்ரவரி 13 , மு.ப. 08:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
பங்களாதேஷில் பொதுத்தேர்தலில் பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
வௌ்ளிக்கிழமை (13) உள்ளூர் நேரப்படி காலை 4 மணியளவில், பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி 185 இடங்களைக் கைப்பற்றியுள்ளதாகவும் அறுதிப் பெருபான்மையைப் பெற்றுவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாராளுமன்றத்தின் 300 இடங்களில் 200 இடங்களைக் கைப்பற்றமுடியும் என்று பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி நம்பிக்கை தெரிவித்துள்ளது.
பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் கலீடா ஸியா(Khaleda Zia), முன்னாள் ஜனாதிபதி ஸியாவுர் ரஹ்மான் (Ziaur Rahman) ஆகியோரின் மகனான தாரிக் ரஹ்மான் (Tarique Rahman) கட்சியை வழிநடத்துகிறார்.
ஏழ்மையான குடும்பங்களுக்கு நிதியாதரவு, பொருளாதாரத்தை மேம்படுத்த வெளிநாட்டு முதலீடு, பிரமராகப் பொறுப்பு வகிக்க 10 ஆண்டுக் கால வரம்பு முதலியவற்றை அவர் வாக்குறுதிகளாக முன்வைத்துள்ளார்.
பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா (Sheikh Hasina) அந்தப் பொறுப்பிலிருந்து 2024இல் அகற்றப்பட்டார். அதன் பின் பங்களாதேஷில் முதல் பொதுத்தேர்தல் நடத்தப்பட்டுள்ளது.
நாட்டின் அடுத்தப் பிரதமராக தாரிக் ரஹ்மான் தெரிவுச்செய்யப்படலாம் என்று நம்பப்படுகிறது.
35 minute ago
39 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
39 minute ago
1 hours ago