2021 மார்ச் 01, திங்கட்கிழமை

ஏறாவூர் இரட்டைப் படுகொலை ; அறுவருக்கும் விளக்கமறியல் நீடிப்பு

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2017 ஜூலை 22 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏறாவூரில் தாய் மற்றும் மகள் ஆகியோரை இரட்டைப் படுகொலை செய்த சந்தேகநபர்கள் அறுவரையும் ஓகஸ்ட்  மாதம்  4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, மேலதிக நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமாகிய முஹம்மத் இஸ்மாயில் முஹம்மத் றிஷ்வி உத்தரவிட்டார்.

சந்தேக நபர்களை, ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் நேற்று (21) ஆஜர் செய்யப்பட்டபோதே, நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார். 

ஏறாவூர் நகர பிரதேசத்தில் முகாந்திரம் வீதி முதலாவது குறுக்கு ஒழுங்கையிலுள்ள வீட்டில் வசித்துவந்த தாயான  நூர்முஹம்மது உஸைரா (வயது 56) அவரது திருமணமாகிய மகளான ஜெனீராபானு மாஹிர் (வயது 32) ஆகியோர் கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் 11ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட 6 சந்தேகநபர்களும் கடந்த செப்டெம்பர் மாதத்திலிருந்து தொடர்ச்சியாக விளக்கமறியல் உத்தரவில் இருந்து வருகின்றனர்.

ஏறாவூர் ஆதார வைத்தியசாலை பின் ஒழுங்கையைச் சேர்ந்த இஸ்மாயில் முஹம்மது பாஹிர் (வயது 24 கொல்லப்பட்ட பெண்ணின் கணவனுடைய சகோதரன்), அப்துல் மஜீத் மாவத்தை ஐயங்கேணியைச் சேர்ந்த வசம்பு என்றழைக்கப்படும் உஸனார் முஹம்மது தில்ஷான் (வயது 29),  பாடசாலை வீதி மீராகேணியைச் சேர்ந்த கலீலுர் ரஹ்மான் அஹம்மது றாசிம் (வயது 23), பள்ளியடி வீதி, காவத்தமுனை, ஓட்டமாவடியைச் சேர்ந்த புஹாரி முஹம்மது அஸ்ஹர் (வயது 23), ஏறாவூர் நகர் போக்கர் வீதியைச் சேர்ந்த  இஸ்மாயில் சப்ரின் (வயது 30), மற்றும் ஏறாவூர் காட்டுப்பள்ளி வீதியைச் சேர்ந்த அபூபக்கர் முஹம்மது பிலால் (வயது 50) ஆகியோரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களாவர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .