2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

ஐக்கிய தேசியக் கட்சியின் யாப்பில் மாற்றம் ஏற்படுத்தப்படுமா?

Super User   / 2010 மே 10 , பி.ப. 02:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் எவ்வாறான  மறுசீரமைப்புகளை மேற்கொள்ள வேண்டும், கட்சி யாப்பில் எவ்வாறான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்பது சம்பந்தமாக ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட உப குழுவின் இறுதி அறிக்கை எதிர்வரும் புதன்கிழமை பூர்த்தி செய்யப்படும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தமிழ்மிரர் இணையதளத்திற்கு சற்று முன் தெரிவித்தார்.

கட்சியின் பல மட்டங்களில் உள்ள உறுப்பினர்களிடமிருந்து முன்மொழிவுகள் வந்து கொன்டிருப்பதனால் இதன் இறுதி அறிக்கை சமர்ப்பிப்பதற்கு இன்னும் ஒரிரு நாட்கள் தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த அறிக்கை காலதாமதவாதற்கு பிரதான காரணம், இவ்வறிக்கை மூலம் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பாரிய மாற்றங்கள் ஏற்படவுள்ளதாகவும், இவ்வறிக்கையை அடிப்படையாகக் கொன்டு மாற்றியமைக்கப்படவுள்ள கட்சியின் யாப்பு நீண்ட நாட்களுக்கு நிலைத்திருக்கவேன்டும் என்று கட்சி  உறுப்பினர்கள் வேண்டிக் கொண்டதாலுமே இவ்வறிக்கையை பூர்த்தி  செய்வதற்கு காலதாமதம் ஏற்படுவதாகவும் கபீர் ஹாசிம் தெரிவித்தார்.

இந்த உபகுழுவின் அறிக்கை எதிர்வரும் வெள்ளிக்கிழமை கட்சி தலமைத்துவத்திடம் சமர்ப்பிக்கப்படும் என்றும் அடுத்த வாரம் இடம்பெறவுள்ள  செயற்குழுக்கூட்டத்தில் இவ்வறிக்கை ஆராயப்படும் என்றும் அவர் குறிப்பிட்டர்.(R.A)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--