Editorial / 2018 செப்டெம்பர் 09 , பி.ப. 05:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நீண்ட காலமாகத் தேடப்பட்டுவந்த சாலிய பெரேரா ஆராச்சி என்ற இலங்கையர், தாய்லாந்தின் பெங்கொக் நகரில் வைத்து சர்வதேச பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது தொடர்பில் இலங்கை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு பெங்கொக் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
2013 ஆம் ஆண்டு 30 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் குறித்த சந்தேகநபர், இலங்கையில் கைது செய்யப்பட்டிருந்ததுடன், நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் வழக்கு ஒன்றும் தொடரப்பட்டிருந்தது.
எனினும் 2013 ஆண்டிலேயே குறித்த சந்தேகநபர் நாட்டை விட்டு தப்பியோடியிருந்ததால் இலங்கை பொலிஸார் அவரை கைது செய்ய சர்வதேச பொலிஸாரின் உதவியை நாடியிருந்தனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள சாலிய பெரேரா ஆராச்சியை நாட்டுக்கு கொண்டுவருவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
24 minute ago
27 minute ago
04 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
27 minute ago
04 Jan 2026