Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 மார்ச் 07 , பி.ப. 12:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
(வி.சுகிர்தகுமார்)
அம்பாரை மாவட்ட மக்கள் எதிர்காலத்திலும் தம்முடன் இணைந்திருக்க வேண்டுமெனத் கேட்டுக்கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், ஐ.தே.கவும் பொதுஜன பெரமுனவும் தமிழ் மக்களைத் தொடர்ந்து ஏமாற்றி வருவதாகவும் தெரிவித்தார்.
அக்கரைப்பற்றில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து கருத்துரைத்த அவர், பூகோளவியல் ரீதியாக தமிழ் மக்கள் பல பிரச்சினைகளை அம்பாறை மாவட்டத்தில் எதிர்நோக்கி வருகின்றனர்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஏனைய மாவட்டங்களை விட அம்பாறை மாவட்டத்தின் மக்களுக்கு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததெனவும் தெரிவித்தார்.
குறிப்பாக எமது பிரதிநிதித்துவத்தை இழக்க நேரிட்டால் பூர்வீகத்தை இழக்க நேரிடும் நிலங்களை பறிகொடுக்க நேரிடும் நமது கலை கலாச்சார விடயங்களிலும் ஏனைய சக்திகளின் தலையீடு இருக்குமெனவும் அவர் எடுத்துரைத்தார்.
அம்பாறை மாவட்டத்தில் தமிழ்த் தேசியத்தை சிதைக்க தேசிய, சர்வதேசரீதியில் பல சக்திகள் உள்நுழைந்திருக்கின்றன. அந்த சக்திகளின் மூலம் தமிழ் மக்களின் வாக்குகள் சிதறடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அவ்வாறு நடைபெற்றால் அம்பாறை மாவட்டத்துக்கு தமிழ் பிரதிநிதித்துவத்தை இழக்க நேரிடுவதுடன், அம்பாரை மாவட்ட மக்கள் விரட்டியடிக்கப்படும் சந்தர்ப்பம் உருவாகும் எனவும் கூறினார்.
எனவே அம்பாரை மாவட்ட மக்கள் நிதானமாக சிந்தித்து வாக்களிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டா அவர், பேரினவாத சக்திகளின் கைக்கூலிகளாக இருக்கும் சிலர் இங்கு ஊடுருவி இருக்கின்றனர். இவர்களுக்கு தமிழ் மக்கள் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும். இது ஒவ்வொரு தமிழனுக்கும் இருக்கின்ற பொறுப்பும் கடமையுமாகும் எனவும் குறிப்பிட்டார்.
45 minute ago
53 minute ago
13 Sep 2025
13 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
53 minute ago
13 Sep 2025
13 Sep 2025