2021 ஏப்ரல் 22, வியாழக்கிழமை

ஐ.தே.கவால் மாத்திரமே நாட்டை மீட்க முடியும்

Editorial   / 2020 பெப்ரவரி 29 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியே நெ‌ருக்கடிகளிலிருந்து நாட்டை மீட்டுள்ளதென தெரிவிக்கும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாட்டு மக்களுக்கு அக்கட்சி மீது நம்பிக்கை உள்ளதெனவும் தெரிவித்தார். 

மாத்தறையில் ஐ.தே.க அலுவலகத்தை மீளத் திறக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு மேலும் கருத்துரைத்த அவர்,

ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையால் ஆடை உற்பத்தி, மீன்பிடித்துறைக்கு பெரும் சலுகைகள் கிடைத்துள்ளதாகவும்,  தற்போதைய அரசாங்கத்தால் அந்த சுதந்திரம் பரிக்கப்பட கூடாதென கோரிக்கை விடுப்பதாகவும் தெரிவித்தார். 

எவ்வாறாயினும் அதி தீவிர சிகிச்சை சிகிச்சை பிரிவில் உயிரிழக்கும் நிலையில் காணப்பட்ட இலங்கையின் பொருளாதாரத்துக்கு வலு சேர்ப்பதற்கான முயற்சிகளை நல்லாட்சி அரசாங்கம் மேற்கொண்டிருந்ததென தெரிவித்த அவர்,  அதற்கான முயற்சிகளை முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவே மேற்கொண்டிருந்தார் என்றும் தெரிவித்தார். 

அத்தோடு, நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த முதல் 100 நாள்களிலேயே செயற்திறனை காண்பித்ததென தெரிவித்த அவர்,  2015 ஆண்டு ஆரம்பத்திலேயே வரவு செலவு திட்டத்தை சமர்பித்து வாக்குறுதி அளித்தவாறு சகல சலுகைகளையும் வழங்கினோம் என்றார். 

வெளிநாடுகளிடம் பெற்ற கடன்களை கூட செலுத்த முடியாத நிலையில் இருந்த நாட்டின் ஆட்சி அதிகாரத்தை பெற்றுக்கொண்டு நாட்டை வழிநடத்தியதாக தெரிவித்த அவர்,  அதனால் நாடு முன்நோக்கி நகர்கிறது என்ற தகவலை சர்வதேசக்குக்கு வழங்கியதோடு, கடன், கடன் வட்டி என்பவற்றையும் வழங்ககூடிய நிலைக்கு நாட்டை இட்டுச் சென்றதாகவும் தெரிவித்தார். 

அதேபோல் உர மானியங்களை வழங்க முடியாமை போன்ற பல குறைபாடுகளையும் நல்லாட்சி அராசாங்கம் விடுத்திருந்தது என்பதை ஏற்றுகொள்ளவதாக தெரிவித்த அவர்,  நாட்டின் மீதான நம்பிகையை போன்​றே வருவயையும் அதிகரிப்பதற்கான முயற்சிகயை மேற்கொண்டிருந்தாகவும் தெரிவித்தார். 

அத்துடன், பொருள்கள் விலையேறும் போது பல பிரச்சினைகளுக்கு மத்தியில் நாட்டு மக்களுக்கான சலுகைகளை பெற்றுக்கொடுத்ததாக தெரிவித்த அவர்,  ஜனாதிபதி தேர்தலில் தோற்றிருந்தாலும் புதிய அரசாங்கத்துக்கு வாய்பளித்துவிட்டு எதிர்கட்சியாக செயற்பட தீர்மானித்தோம் என்றார். 

முதல் முறையாக இலங்கை அரசாங்கம் இன்னொரு நாட்டுக்கான கடனை செலுத்த முடியாதென  கூறுகின்றதென தெரிவித்த அவர், எமக்கான நாடொன்று வேண்டும் என்று கோருபவர்களுக்கு யாசகம் கோரும் நாடுதான் வேண்டுமா என வினவிய அவர், யாசகம் செய்யும் சிங்களவர்களாக இருக்க வேண்டுமா என்றும் கோரினார். 

அதேபோல் இன்றும் எரிபொருள் விலையை குறைக்க அரசாங்கத்தால் ஏன் வழங்க முடியவில்லை என வினவிய அவர், 100 நாள்களை கடந்துவிட்ட அரசாங்கம் புதிய அரசாங்கம் எதனையும் செய்யவில்லை எனத் தெரிவித்த அவர்,  நல்லாட்சியை விமர்சித்தவர்கள் மைத்திரியை புதிய கூட்டணிக்கு தலைவராக்கி கொண்டுள்ளமை வேடிக்கையானது என்றார். 

எவ்வாறாயினும் நாடு நெருக்கடியான நிலைமைகளுக்கு செல்லும் போது நாட்டை மீட்க ஐக்கிய தேசியக் கட்சியே முன்வந்துள்ளதென தெரிவித்த அவர்,  நெருக்கடியான சந்தர்ப்பங்களில் நாட்டை மீட்க ஐ.தே.க முன்வரும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X