Editorial / 2020 ஜனவரி 15 , மு.ப. 11:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
பா.நிரோஸ்
அரசமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காகவே அரசாங்கம் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை கோருவதாகதத் தெரிவித்துள்ள தொழில்நுட்ப, புத்தாக்க இராஜாங்க அமைச்சர் திலங்க சுமதிபால, நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சனுக்காக, ஐக்கியத் தேசியக் கட்சி பொதுமக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டுமெனவும் தெரிவித்தார்.
அலரி மாளிகையில், நேற்று(14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து கருத்துரைத்த அவர், நீதித்துறையின் நம்பகத் தன்மை இல்லாது ஒழிக்கப்பட்டுள்ளதாகவும் கடந்த அரசாங்கத்தில் அரசமைப்புச் சபையிலிருந்தவர்கள் நீதித்துறை மீது தலையீடு செய்தனர் எனவும் சாடினார்.
19ஆவதுத் திருத்தச் சட்டம் மீது மக்கள் நம்பிக்கை இழந்திருப்பதாகவும் இதனை மாற்றியமைக்க அரசமைப்பு மாற்றம் செய்யப்பட வேண்டுமெனவும் தெரித்தார்.
அரசமைப்பு மாற்றத்தை செய்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையிலான அரசாங்கத்துக்கு மூன்றிலிரண்டுப் பெரும்பான்மை அவசியமெனவும், இதற்காகவே நாடாளுமன்றப் பெரும்பான்மையை அரசாங்கம் கோருவதாகவும் கூறினார்.
இதேவேளை முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவின் சர்ச்சைக்குரிய குரல் பதிவுகள் தொடர்பில் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், ரஞ்சன் ராமாநாயக்க இருக்கும் நாடாளுமன்றில் தானும் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பது கவலையளிப்பதாகவும் தெரிவித்தார்.
ரஞ்சன் போன்ற ஒருவருக்கு நாடாளுமன்ற வாய்ப்பை வழங்கியமைக்காக, ஐக்கியத் தேசியக் கட்சி மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் ரஞ்சனை ஐ.தே.கவிலிருந்து விரட்டியடிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
2 hours ago
23 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
23 Dec 2025