2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

ஐ.நா செயலாளர் பான்கீமூனின் நிபுணர் குழு நியமனத்திற்கு இலங்கை எதிர்ப்பு

Super User   / 2010 ஜூன் 23 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்செயல்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான்கீமூனின் நிபுணர்கள் குழு நியமனத்திற்கு இலங்கை தனது எதிர்ப்பைத் தெரிவித்தது.

இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் சற்று முன்னர் வெளியிட்டு வைத்துள்ள அறிக்கையிலேயே, இவ்வாறு தனது எதிர்ப்பை வெளியிட்டார்.

இறைமையுடைய நாட்டின் விவகாரங்களில் தலையிடுவது தேவையற்ற விடயம் என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டார்.

நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான இந்த சந்தர்ப்பத்தில் தலையீடுகள் மாத்திரமல்லாது, இலங்கைக்கு எதிரான சக்திகள் இதனை சாதகமாகப் பயன்படுத்த முனைவதாகவும் அவர் கூறினார்.

இலங்கை பலம் வாய்ந்த சுதந்திரமான நீதித்துறையுடைய ஒரு நாடு என்பதுடன், பரீட்சித்துப் பார்க்கப்பட்ட நீதி நிர்வாக அமைப்புக்கள் உள்ள ஒரு நாடு எனவும் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டார்.

30 வருடகாலமாக இருந்த பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டிருப்பதாக தனது அறிக்கையில் சுட்டிக்காட்டிய அமைச்சர், கடந்தகால நெருக்கடியான நிலைமைகளை ஆராய்வதற்காக நல்லிணக்க ஆணைக்குழுவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நியமித்திருப்பதாகவும் தெரிவித்தார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--