2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

கட்சியிலிருந்து விலகும் எண்ணம் தனக்கு இல்லை-எல்லாவல மேதானந்த தேரர்

Super User   / 2010 ஜூன் 25 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜாதிக ஹெல உறுமய கட்சியிலிருந்து விலகும் எண்ணம் தனக்கு இல்லை என அந்தக் கட்சியின் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்தார்.

ஆனாலும், கட்சியின் மத்திய குழுக் கூட்டங்களில் கலந்துகொள்வது தொடர்பில் தான் தீர்மானங்கள் எதனையும் மேற்கொள்ளவில்லை எனவும் அவர் கூறினார்.

ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தேசிய மாநாட்டை அடுத்து, கட்சித் தலைவர் பதவியிலிருந்து எல்லாவல மேதானந்த தேரர் அண்மையில் நீக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், கடிதம் மாத்திரமே தனக்கு கிடைக்கப் பெற்றிருந்தததுடன், கட்சித் தலைவரை மாற்றுவதற்கான கூட்டத்தில் தான் கலந்துகொள்ளவில்லை எனவும் எல்லாவல மேதானந்த தேரர் குறிப்பிட்டார்.

இதேவேளை, ஜாதிக ஹெல உறுமய கட்சியின் மத்திய குழுக் கூட்டத்திற்கு எல்லாவல மேதானந்த தேரர் பங்குபற்றியிருக்கவில்லை என அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்தார்.

தனக்கு கடிதம் எதுவும் கிடைக்கப் பெறவில்லை என்று முன்னர் கூறிய எல்லாவல மேதானந்த தேரர், தற்போது கதையை மாற்றியிருப்பதாகவும் மேலும் அவர் கூறினார். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--