2021 ஜனவரி 23, சனிக்கிழமை

கட்சி அலுவலகம் மீது தாக்குதல்; அறுவர் கைது

Editorial   / 2019 நவம்பர் 18 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டுநாயக்க ​பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வல்பொல- அடிஅம்பலம பகுதியிலுள்ள வீடொன்றில் நடத்திச் செல்லப்பட்ட, புதிய ஜனநாயக முன்னணியின் கட்சி அலுவலகம் மீது நேற்று இரவு தாக்குதல் சம்பவம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன், இச்சம்பவம் தொடர்பில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனக் கட்சியைச் சேர்ந்த 6 ஆதரவாளர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனரென்றும் கட்டுநாயக்க பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபர்கள் கார், மோட்டார் சைக்கிள் இரண்டில் வருகைத் தந்தே, இந்தத் தாக்குதலை முன்னெடுத்துள்ளனரென்றும், இத்தாக்குதலால் குறித்த வீட்டு உரிமையாளரும் அவரது மனைவியும் காயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென்றும் ​பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .