2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஞாயிறன்று இந்தியா விஜயம்; மன்மோகனுடன் சந்திப்பு

Super User   / 2010 ஜூலை 02 , பி.ப. 01:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் அடங்கிய தூதுக்குழுவொன்று நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை இந்தியாவுக்கு பயணமாகவுள்ளது.

வடக்கில் இடம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களின் நிலைமை, தேசிய பிரச்சினைக்கான அரசியல் தீர்வு உள்ளிட்ட இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடும் வகையிலேயே இந்த விஜயம் அமையவுள்ளது.

அந்தவகையில் இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கை சந்திக்கவுள்ள இந்த தூதுக்குழு மேற்படி விடயங்கள் தொடர்பில் அவர்களுடன் கலந்துரையாடவுள்ளதாக கூட்டமைப்பு எம்.பி.யான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமசந்திரன், மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் ஏ.விநாயகமூர்த்தி ஆகியோர் இந்த விஜயத்தில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--