Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2017 மே 30 , மு.ப. 02:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, அவன்ட் காட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் உட்பட எழுவருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், வாய்மொழிமூல ஆட்சேபனைகளைச் சமர்ப்பிப்பதற்கான தினமாக ஜூலை 12ஆம் திகதியை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம், நேற்று (29) குறித்ததது.
அன்றைய தினத்தில், முறைப்பாட்டாளர் தரப்பும் பிரதிவாதிகள் தரப்பும், வாய்மொழிமூல ஆட்சேபனைகளைச் சமர்ப்பிக்கலாம் என கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க பண்டார உத்தரவிட்டார்.
அவன்ட் காட் மெரிடைம்ஸ் நிறுவனத்தினூடாக மிதக்கும் ஆயுதக் களஞ்சியசாலையை அமைத்து, அரசாங்கத்துக்கு 11.4 பில்லியன் ரூபாய் நட்டத்தை ஏற்படுத்தினர் என்ற குற்றச்சாட்டு தொடர்பில், இலஞ்ச, ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, நேற்று (29) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
பிரதிவாதிகளின் அடிப்படை எதிர்ப்பு மற்றும் முறைப்பாட்டாளர் தரப்பின் எதிர் ஆட்சேபனை ஆகியவற்றை எழுத்துமூலம் மன்றில் சமர்ப்பிக்குமாறு, கடந்த அமர்வில் நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
முறைப்பாட்டாளர் தரப்பின் எதிர் ஆட்சேபனையின் எழுத்துமூல நகல்கள் காலதாமதமாகத் தமக்குக் கிடைத்தமையால், வாய்மொழிமூல சமர்ப்பிப்பைக் கொண்டுசெல்வது சிரமம் என, கோட்டாபய ராஜபக்ஷவின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் ரொமேஷ் டி சில்வா நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்தார்.
அத்துடன், வாய்மொழிமூல சமர்ப்பிப்புக்கு தமக்கு கால அவகாசம் தேவைப்படுவதாகவும் அதனை வழங்குமாறும் மன்றில் கோரி நின்றார்.
அவகாசம் கொடுப்பதற்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்றும் தாம், இரண்டு வாரங்களுக்கு முன்னரே, எழுத்துமூல எதிர் ஆட்சேபனையைச் சமர்ப்பிக்க இருந்ததாகவும் கடந்த வாரமே சமர்ப்பிக்க முடிந்ததாகவும் முறைப்பாட்டாளர் தரப்பில் ஆஜரான அரச சட்டத்தரணி ஜனக பண்டார கூறினார். இதற்கு இடையில், ஏழாவது பிரதிவாதி, ஜூலை 10ஆம் திகதியிலிருந்து 15ஆம் திகதிவரை வெளிநாடு செல்லவுள்ளார் என அறிவித்த அவரின் சட்டத்தரணி, அதற்கு அனுமதியும் கோரினார்.
வாய்மொழிமூல ஆட்சேபனைகளை இரு தரப்பினரும் சமர்ப்பிப்பதற்கான தினமாக ஜூலை 12ஆம் திகதியைக் குறித்த நீதவான், 7ஆவது பிரதிவாதி, வெளிநாடுசெல்வதற்கும் அனுமதி வழங்கினார்.
8 hours ago
18 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
18 Sep 2025