2021 ஏப்ரல் 12, திங்கட்கிழமை

‘கடந்த ஆட்சியை பொது பல சேனாவே கவிழ்த்தது’

Editorial   / 2017 மே 28 , பி.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

“பொது பல சேனாவினால் தான், கடந்த ஆட்சி கவிழ்ந்தது என்பதே வரலாற்று உண்மை” என்று, ஜனநாயக மக்கள் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் மேல் மாகாண சபையின் உறுப்பினருமான நல்லையா குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.   

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,   

“ஞானசார தேரரின் அடாவடித்தனத்தை, அரசியல் நாகரிகம் அறிந்த விக்னேஸ்வரனுடனோ அல்லது ரவூப் ஹக்கீமுடனோ எவ்வாறு ஒப்பிடமுடியும்? ஞானசார தேரரைக் கைது செய்வதாயின், சிவாஜிலிங்கம், விக்னேஸ்வரன், ரவூப் ஹக்கீம் ஆகியோரையும் கைது செய்யுங்கள் என்று கூறுவது, எந்த வகையிலும் ஒப்பீட்டடிப்படையற்றது.    

“நல்லாட்சியை ஏற்றப்படுத்தியவர்கள், தமிழ், முஸ்லிம் மக்களே ஆவர். எனவே, தமிழ் - முஸ்லிம் மக்களுக்கு எதிரான பொது பல சேனாவின் தாக்குதல்களை, அரசாங்கம் அனுமதிக்கக் கூடாது என்பது, அரசாங்கத்துக்கு இருக்கக்கூடிய தார்மிகப் பொறுப்பாகும்.   

“இலங்கையில், முஸ்லிம் வலயம் அமைந்தாலும், அது ஒருபோதும் இந்தியாவைப் பலவீனபடுத்தாது. இந்தியா சுதந்திரம் பெற்றபோதே, முஸ்லிம்கள் தனி நாடமைக்க இந்தியா அனுமதித்து விட்டது. அதுதான், ஜின்னா அமைத்த பாகிஸ்தான் என்பதை அறியாத பொது பல சேன, உளறுகின்றது.

“விக்னேஸ்வரனோ, விஜயகலாவோ, சிவாஜிலிங்கமோ, பள்ளிகளை அழிக்க முயலவில்லையே. அல்லது ரிஷாட் பதியுதீனும் ரவூப் ஹக்கீமும், விகாரைகளை உடைக்க ஆதரவு நல்கவில்லையே?” என, அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .