Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Editorial / 2020 ஜனவரி 17 , மு.ப. 10:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அலுவலக பணிப்பாளர் சபையின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கையின் பிரபல பாடகர்களான பாத்திய ஜயகொடி, சந்தூஷ் வீரமன், இராஜ் விரரத்ன ஆகியோரின் தமக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புகளுக்குரிய கொடுப்பனவுகள் அல்லது எந்தவொரு சலுகைகளையும் பெற்றுக்கொள்வதில்லை என தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அலுவலக பணிப்பாளர் சபையின் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக 25,000 ரூபாய் மாதாந்த கொடுப்பனவும் இலவச வாகன வசதிகளும் வழங்கப்படும் நிலையில், குறித்த மூவரும் இந்த விடயங்களைப் பெற்றுக்கொள்ளப் போவதில்லை என தீர்மானித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, குறித்த மூவரும் தத்தமது சொந்த செலவில் தமது கடமைகளுக்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக அறிவித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பணிப்பாளர் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அலுவலக உறுப்பினராக இணைந்துக்கொள்ளுமாறு, இலங்கையின் முன்னாள் நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
9 minute ago
16 minute ago