2020 ஒக்டோபர் 01, வியாழக்கிழமை

குடும்பத்தாரின் தீர்மானப்படி பார்வதி அம்மாள் இந்தியா செல்வார்-சிவாஜிலிங்கம்

Super User   / 2010 மே 11 , மு.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயாரான பார்வதி அம்மாளின் குடும்பத்தாரது தீர்மானத்திற்கமையவே அவர் சிகிச்சைகளுக்காக இந்தியா செல்வார் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

இதேவேளை, மலேசியாவில் தங்கியிருப்பதற்கான விசா முடிவடையும் காரணத்தால் நேற்று மாலை இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட பார்வதி அம்மாள், தற்போது யாழ்ப்பாணத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளார் என்றும் அவர் கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-

பார்வதி அம்மாளுக்கான மருத்துவ சிகிச்சைகள், யாழ்ப்பாணத்தில் அவரது சொந்த ஊரில் மேற்கொள்ளப்படலாம் என நம்பப்படுகின்றது.  இருப்பினும் இது குறித்து அவரது பிள்ளைகளும் குடும்ப உறுப்பினர்களுமே முடிவெடுப்பார்கள்.

பார்வதி அம்மாள் இந்தியாவில் சிகிச்சை பெறுவதற்கு 6 மாதகால விசா வழங்கப்பட்டுள்ளதுடன், அதற்காக பல்வேறு நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன.  இதனாலேயே இந்தியாவுக்கு செல்வது தொடர்பில் அவரது குடும்ப உறுப்பினர்கள் தீர்மானிக்கவில்லை.

இந்நிலையில் இந்திய மத்திய அரசு விடுத்த அறிக்கை குறித்தும் அந்நாட்டு அரசாங்கம் பார்வதி அம்மாளுக்கு வழங்கிய விசா நிராகரிக்கப்பட்டதான செய்தி குறித்தும் குறிப்பிடுவதற்கில்லை. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .