2021 ஏப்ரல் 15, வியாழக்கிழமை

கடல் நீர் உட்புகுந்ததால் 22 வீடுகள் நீரில் மூழ்கின

Editorial   / 2020 மார்ச் 12 , பி.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

என். ஜெயரட்னம்,  துசித குமார டீ சில்வா

களுத்துறை வடக்கு கெலிடோ கடற்கரைப் பகுதியில், இன்று (12) அதிகாலை ஐந்து மணியளவில்  கடல் நீர் திடீரென  உட்புகுந்ததால், 22 வீடுகள் நீரில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.  இதனால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இதற்கமைய, கெலிடோ நேர் வீதி, குறுக்கு வீதி என்பன இன்று (12) நீரில் மூழ்கி காட்சியளித்ததுடன், மீனவ குடியிருப்புகள் மற்றும் அவர்களின் உபகரணங்களுக்கும் இதனால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக,  களுத்துறை மாவட்டச் செயலாளர்,  பிரதேச செயலாளர், அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இன்று (12) அப்பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

இதனையடுத்து, 22 குடும்பங்களை அங்கிருந்து வெளியேறுமாறு, அரசாங்க அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X