2021 ஏப்ரல் 15, வியாழக்கிழமை

காணிப்பிரச்சினையைத் தீர்க்க விசேட வேலைத்திட்டம்

George   / 2017 மே 26 , மு.ப. 09:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஜே.ஏ.ஜோர்ஜ்  

வடக்கு, கிழக்கு மகாணங்கள் உள்ளிட்ட நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் காணப்படும் காணிப்பிரச்சினைக்கு தீர்வுக் காண விசேட வேலைத்திட்டமொன்று உருவாக்கப்படும் என, அமைச்சர் கயந்த கருணாதிலக்க, நேற்று(25) தெரிவித்தார்.

காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சராக கயந்த கருணாதிலக்க, நியமிக்கப்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்றில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் பின்னர், ‘ வடக்கில் காணப்படும் காணிப்பிரச்சினை தொடர்பில் அமைச்சர் நடவடிக்கை எடுப்பாரா, வடக்குக்கு எப்போது செல்வீர்கள் என, ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர், “நாட்டில் காணிப்பிரச்சினை முக்கிய பிரச்சினையாக இருக்கின்றது. அதை தீர்க்க பாரிய வேலைத்திட்டங்கள் அவசியம். நாளை ( இன்று) அமைச்சுப் பதவியை ஏற்றபின்னர் , ஊடகவியலாளர் மாநாடு நடத்தப்படும். அதன்பின்னர் அறிவிப்புகள் உத்தியோகபூர்வமாக விடுக்கப்படும். அதிகாரிகளை சந்திக்க வேண்டும். பிரச்சினைகளின் தன்மையை ஆராயவேண்டும்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X