Editorial / 2018 செப்டெம்பர் 18 , பி.ப. 03:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சதீஸ், செ.தி.பெருமாள், ரஞ்சித் ராஜபக்ஷ
மஸ்கெலியா, மின்னா பெயாலோன் தோட்டத்திலிருந்து, கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் காணாமல் போனார் எனக் கூறப்படும் பெண்ணின் சடலத்தை, மஸ்கெலியா பெயாலோன் நீர்த்தேக்கத்திலிருந்து, பொலிஸார் இன்று (18) மீட்கப்பட்டுள்ளார்.
மேற்படி தோட்டத்தைச் சேர்ந்த கறுப்பையா லெச்சுமி (வயது 65) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேற்படி பெண்ணை, கடந்த இரண்டு தினங்களாகக் காணவில்லை என, பெண்ணின் உறவினர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்நிலையிலேயே அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில், நோர்வூட் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
30 minute ago
33 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
33 minute ago
45 minute ago