Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Kanagaraj / 2016 ஜூலை 15 , மு.ப. 03:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த யுத்த காலத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் பற்றிய விசாரணைகளுக்கு, சர்வதேச தொழில்நுட்ப உதவிகளுக்கும் வெளிநாட்டு கண்காணிப்பாளர்களுக்கும் அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக, மாகாண அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, நேற்று வியாழக்கிழமை (14) தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர், இந்த விடயத்துக்கு ஆதரவு வழங்குவதாகவும், எனினும் வெளிநாட்டு நீதிபதிகளுக்கு ஆதரவாக அவர்கள் இருக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
நம்பகரமான விசாரணையொன்று முன்னெடுக்கப்படவேண்டும் என்று குறிப்பிட்டு, ஐக்கிய அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் நிஷா பிஸ்வாலால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கை பற்றி கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
'இலங்கை தொடர்புடைய பிரச்சினைகளை விசாரணை செய்வதற்கு, வெளிநாட்டு நீதிபதிகளை நியமிப்பதற்கு, இலங்கையின் அரசியலமைப்பில் எந்தவொரு சட்டமும் இல்லை' என்று அவர் தெரிவித்தார்.
மேலும் கடந்த யுத்த காலத்தின் போது, பாதுகாப்பு படையினர் கொத்தணிக் குண்டுகளை பாவித்தார் என்று சில சர்வதேச அமைப்புகளால் கூறப்பட்ட கருத்துகளை அவர் புறக்கணித்தார். 'பாதுகாப்புப் படையினருக்கு இவ்வாறு கொத்தணிக் குண்டுகளை பயன்படுத்துவதற்கு, எந்தவொரு திறனும் இல்லை. மேலும் தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன், இன்னும் உயிருடனேயே உள்ளார் என்ற ஒரு கட்டுக்கதையும் கூறப்படுகின்றது' என்றும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
3 hours ago