நல்லதம்பி நித்தியானந்தன் / 2017 மே 29 , மு.ப. 10:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நல்லதம்பி நித்தியானந்தன்
ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சித்தாண்டிப் பிரதேசத்தில் உதயன்மூலை பாடசாலை வீதியில் ஞாயிற்றுக்கிழமை (28) இரவு இடம்பெற்ற கத்திக் குத்துச் சம்பவத்தில்; குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், பெண்ணொருவர் காயமடைந்துள்ளார்; எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தக் கத்திக்குத்தை மேற்கொண்டதாகக் கூறப்படும் இருவர் உடனையே கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸார் கூறினர்.
மேற்படி வீதியை அண்டி வசிக்கும் இரண்டு குடும்பங்களுக்கு இடையில் ஏற்கெனவே இருந்த பகை காரணமாக ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியது. இதன்போது, மேற்படி நபருக்கும் இரண்டு சந்தேக நபர்களுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இந்தக் கத்திக் குத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் இந்தச் சம்பவத்தின்போது, சந்தேக நபர்களின் மோட்டார் சைக்கிளும் மற்றும் சுற்றுவேலியும் உயிரிழந்த நபரின் உறவினர்களால் சேதமாக்கப்பட்டுள்ளன எனவும் பொலிஸார் கூறினர்.
சித்தாண்டியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான நவரட்ணம் ரவி (வயது 39) என்பவரே கத்திக் குத்தில் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, இந்தச் சம்பவத்தில் சந்தேக நபர்களின் உறவினரான பொன்னையா சாந்தமலர் (வயது 40) என்பவர் காயமடைந்துள்ளார்.
இந்தச் சம்பவத்தில் கழுத்தில் படுகாயமடைந்த நவரட்ணம் ரவி, மாவடிவேம்பு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதன் பின்னர், மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026