Janu / 2026 ஏப்ரல் 21 , பி.ப. 09:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான இரண்டு வார கால போர்நிறுத்தத்தை நீடிக்குமாறு பாகிஸ்தான் செவ்வாய்க்கிழமை (21)வலியுறுத்தியுள்ளதுடன், பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திரத்தின் அவசியத்தையும் கோடிட்டுக் காட்டியுள்ளது.
பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதரக அதிகாரி நடாலி ஏ. பேக்கருடன் (Natalie A Baker) இடம்பெற்ற சந்திப்பின் போதே, துணைப் பிரதமரும் வெளிநாட்டு அமைச்சருமான இஷாக் தார் (Ishaq Dar) இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளதாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நிலவி வரும் சவால்களுக்கு தீர்வுகாணவும், பிராந்தியத்தில் நிலையான அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை எட்டவும் இராஜதந்திரம் மற்றும் பேச்சுவார்த்தையே ஒரே வழி என்பதை பாகிஸ்தான் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக இச்சந்திப்பின் போது அமைச்சர் இஷாக் தார் சுட்டிக்காட்டினார்.
வொஷிங்டனுக்கும் டெஹ்ரானுக்கும் இடையே "தொடர்ச்சியான ஈடுபாடு" அவசியம் என வலியுறுத்திய அவர், போர்நிறுத்தத்தை நீடிப்பது குறித்து இரு நாடுகளும் பரிசீலிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago