2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

குப்பை மேட்டில் தீப்பரவல்

Editorial   / 2020 பெப்ரவரி 29 , பி.ப. 01:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.இஷட்.ஷாஜஹான்)

நீர்கொழும்பு மாநகர சபையின் கழிவகற்றும் பிரிவினரால் குப்பைகள் கொட்டப்படும் கொச்சிக்கடை, ஓவிட்டியாவத்தை பிரதேசத்தில் குப்பை மேட்டில் நேற்றிரவு (28) 8.30 மணியளவில்  பாரிய தீ ஏற்பட்டது.

எவ்வாறாயினும்,  நீர்கொழும்ப மாநகர சபையின் தீயணைப்புப் படைப் பிரிவினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு தீயை அணைத்துவிட்டுச் சென்றிந்தனர். 

இருப்பினும் இன்று (29) காலை 9.00 மணியளவில் குப்பை மேட்டின் ஒரு பகுதி தீ பற்றி எரிவதை அவதானிக்க முடிந்ததோடு,  தீ காரணமாக எழுந்த புகை மண்டலம் பிரதேசத்தில் பரவியதன் காரணமாக பிரதேசவாசிகள் அசளகரியங்களை எதிர்நோக்கினர்.

இனந்தெரியாத நபர்கள் குப்பையில் தீ வைத்திருக்கலாம் என்று சிலர் சந்தேகிக்கப்படுவதாகவும்,  இதற்கு முன்னரும் சில தடைவைகள் இந்த குப்பை மேடு தீப்பற்றி எரிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .