2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

கொம்பனித்தெருவில் வீடுகள் அகற்றல்; தனிநபர் ஒத்திவைப்பு பிரோரணைக்கு நாடாளுமன்றத்தில் தடை

Super User   / 2010 ஜூன் 11 , பி.ப. 01:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த ஏப்ரல் 8ஆம் திகதி கொழும்பு, கொம்பனித்தெரு பகுதியில் சட்ட விரோத வீடுகள் என்று 22 வீடுகள் அகற்றப்பட்டமை தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் தனிநபர் ஒத்திவைப்பு பிரோரணை ஒன்றை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் முன்வைத்தார்.

எனினும் இது சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் மேற்கொள்ளப்பட்டுள்ளமையால் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள முடியாது என்று அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா குறிப்பிட்டார்.

உயர் நீதிமன்றத்தில் இது சம்பந்தமாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்களின் மூலம் தெரியவந்ததே ஒழிய, வழக்கை பதிவு செய்துள்ளதாக உயர் நீதிமன்ற பதிவாளர் அறிவிக்கவும் இல்லை, உயர் நீதிமன்ற நீதிபதிகள் விசாரணைக்கு எடுத்து கொள்வது என்று அறிவிக்கவும் இல்லை. இதன் காரணமாக நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளலாம் என்றார் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம்.

இது விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுமாயின் தான் பதிலளிக்க  தயார் இல்லை என்று அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களினால் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் அமைச்சர்கள் நாடாளுமன்றத்தில் இருப்பது  அவர்களின் சிறப்புரிமையை மீறும் செயலாகும். பாதுகாப்பு செயலாளரிற்கு பயந்து கொண்டு இவ்விவாதத்திற்கு பதிலளிக்க முடியாது என அமைச்சர் குறிப்பிடுகின்றார்.

எவ்வாறாயினும், இது சம்பந்தமான விவாதம் இன்று  மேற்கொள்ளப்பட வேண்டும். அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்களால் கேட்கப்படும் கேள்விகளுக்கு குறிப்பிட்ட அமைச்சர் பதிலளிக்க வேண்டும் என்றார் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம். 

எனினும், சபைக்கு தலைமை தாங்கிக்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம் அஸ்வர் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் மேற்கொள்ளப்பட்டுள்ளமையால் இன்று விவாதிக்க முடியாது. நீதிமன்ற விசாரணைகளின் முடிவடைந்த பிற்பாடு இது சம்பந்தாக விவாதிப்போம் என்று கூறி நாடளுமன்ற அமர்வை எதிர்வரும் 29ஆம் திகதி வரை ஒத்திவைத்தார்.(R.A)  Comments - 0

  • mohan Saturday, 12 June 2010 03:47 PM

    நன்றி ஹக்கீம் எம் பி . அஸ்வர் ஹாஜிஜார் ! நன்றாக தலைமை தாங்குரிங்கே!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--