2025 ஜூலை 07, திங்கட்கிழமை

கையடக்கத் தொலைபேசியில் ஆபாச இணையதள பாவனை தடை?

Super User   / 2010 ஜூன் 01 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

கையடக்கத் தொலைபேசி ஊடாக பயன்படுத்தப்படுகின்ற ஆபாச இணையதளங்களை தடை செய்வது சம்பந்தமாக, எதிர்வரும் 4ஆம் திகதி பொலீஸ் பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவிற்கும் கையடக்க தொலைபேசி வழங்குனர் நிறுவனத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெறவிருப்பதாக பொலீஸ் பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவு டெய்லிமிரர் இணையதளத்திற்கு தெரிவித்தது.

கையடக்கத் தொலைபேசிப் பாவனையாளர்களிடமிருந்து வாக்குமூலங்களைப் பெற்று அதனை நீதிமன்றத்தில் அறிக்கை சமர்பிக்கவுள்ளதாகவும் பெண் பொலிஸார் மற்றும் சிறுவர் சபையின் பொலீஸ் பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவு அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

இலங்கையில்  கையடக்கத் தொலைபேசி ஊடாக 40 ஆபாச இணையதளங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக பொலீஸ் பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவு தெரிவிக்கின்றது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .