Nirosh / 2021 ஏப்ரல் 08 , மு.ப. 06:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
பா.நிரோஸ்
அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை மீதான விவாதம், தீர்மானிக்கப்பட்டதைப் போல, இன்றும் (8) நாளையும் (9) நடைபெற வேண்டும் என்று, ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியமைக்கு, தெளிவானப் பதிலை வழங்காது சபாநாயகர் எழுந்துச் சென்றதால், சபையில் பெரும் கூச்சல் குளப்பம் ஏற்பட்டது.
கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதைப் போன்று, அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை, இன்றும் (8) நாளையும் (9) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என தெரிவித்த எதிர்க் கட்சியின் பிரதமக் கொறடா லக்ஷமன் கிரியெல்ல, இதில் மாற்றங்கள் செய்யப்படக்கூடாதெனவும் தெரிவித்தார்.
இன்று (08) நடைபெறும் விவாதம் என்னவென்று, இன்று காலை நடைபெறும் கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் போது கலந்துரையாடி தீர்மானிக்கப்படும் எனவும் இதுத் தொடர்பில் உயர்நீதிமன்றத்திடம் தான் வினவ வேண்டும் எனவும் சபாநாயகர் தெரிவித்தார்.
எனினும் அவ்வாறு செய்ய முடியாதெனத் தெரிவித்த லக்ஷமன் கிரியெல்ல, காலையில் தீர்மானிக்கப்பட்டால் எவ்வாறு விவாதத்துக்கு தயாராவதென கேள்வி எழுப்பியதோடு, பாராளுமன்றம் சுயாதீனமாகச் செயற்படக்கூடிய ஒன்றெனவும் நீதிமன்றத்துக்கு அடிப்பணிந்து பாராளுமன்றம் செயற்படாதெனவும் தெரிவித்தார்.
இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பி, இன்று (08) நடைபெறும் பாராளுமன்ற விவாதம் எதுவென சபாநாயகர் சபைக்கு அறிவிக்க வேண்டுமென அறிவுறுத்தினார்.
எனினும் சபாநயாகர், இதுத் தொடர்பில் காலையில் நடைபெறும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடித் தீர்மானிக்கப்படும் என்றுத் தெரிவித்து அக்கிராசனத்திலிருந்து எழுந்துச் சென்றார்.
20 minute ago
24 minute ago
33 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
24 minute ago
33 minute ago
39 minute ago