2021 ஜனவரி 27, புதன்கிழமை

குருநாகலையில் ஆளும் கட்சி ஆதரவாளர் ஒருவர் சுட்டுக்கொலை

Super User   / 2010 ஏப்ரல் 05 , மு.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

குருநாகலை மாவட்டத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஆதரவாளர்  ஒருவர் நேற்றிரவு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

குறித்த ஆதரவாளர் தனது வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது, மற்றுமொரு வாகனத்தில் வந்த இனந்தெரியாத நபர் இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளார்.

26 வயதுடைய ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஆதரவாளரே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டவர் ஆவார்.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .