R.Tharaniya / 2025 டிசெம்பர் 15 , மு.ப. 10:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த 2004-ம் ஆண்டு வெளியான காதல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சந்தியா. படம் திரைக்கு வந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றதுடன் சந்தியாவையும் சினிமா உலகில் உச்சத்துக்கு கொண்டு சென்றது.
முதல் படத்திலேயே அசாத்தியமான நடிப்பை கொடுத்த சந்தியா டிஸ்யூம், வல்லவன் உள்பட பல படங்களில் நடித்து வந்தார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்து வந்த சந்தியா கடந்த 2015-ம் ஆண்டு சாப்ட்வேர் துறையில் பணியாற்றும் சந்திரசேகரன் என்பவரை திருமணம் செய்தார்.
இந்த தம்பதிகளுக்கு குழந்தைகள் இருக்கின்றனர் .திருமணத்திற்கு பின்பு சினிமாவிலிருந்து விலகி இருந்த சந்தியா 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சினிமா நடிப்புக்கு திரும்பியுள்ளார் .
முதற்கட்டமாக வெப் தொடர் ஒன்றில் முதன்மை கதாபாத்திரத்தில் காதல் சந்தியா நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சென்னையில் சில தினங்களுக்கு முன்பு தொடங்கியது.
தொடரில் கதாநாயகனாக விக்ராந்த் நடிக்க பாடினி குமார் உள்பட பலர் நடித்துள்ளனர். இதைத்தொடர்ந்து ஒரு புதிய படத்தில் காதல் சந்தியாவை நடிக்க வைப்பதற்கு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றன.





56 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago