2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

கொரோனா தொற்று சந்தேகத்தில் 133 பேருக்கு சிகிச்சை

Editorial   / 2020 மார்ச் 15 , பி.ப. 01:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடு முழுவதுமுள்ள வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ் தொற்று என்ற சந்தேகத்தில் இதுவரை 133 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அங்கொடை தொற்றுநோயியல் பிரிவில் அவர்களில் 45 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நீர்கொழும்பு வைத்தியசாலையில் 15 பேரும், குருநாகல் போதனா வைத்தியசாலையில் 14 பே
ரும், கம்பஹா வைத்தியசாலையில் 13 பேரும், பொலன்னறுவை மற்றும் இரத்தினபுரி வைத்தியசாலைகளில் 12 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, ரிட்ஜ்வே சீமாட்டி வைத்தியசாலையிலும் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 4 சிறுவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் இதுவரை 10 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .