2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

கீரியை சுத்தப்படுத்திய மாணவன்

Editorial   / 2018 ஓகஸ்ட் 23 , பி.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் - கீரி கடற்கரையில் கரையொதுங்கிக் காணப்பட்ட கழிவுப்பொருட்களை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் சுத்தப்படுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 4ஆம் வருட மாணவன் ஆர்.றொக்சன் என்ற மாணவனே, இப்பணியில் ஈடுபட்டுள்ளார்.

கள ஆராய்வுகளை மேற்கொள்ளும் முகமாக, நேற்று முன்தினம் (22) மாலை, கீரி கடற்கரைப் பகுதிக்குச் சென்ற குறித்த மாணவன், கடற்கரைப் பகுதியில் கரையொதுங்கிக் காணப்பட்ட கழிவுப் பொருட்களைச் சேகரித்து, ஓர் இடத்தில் குவித்துள்ளார்.

பின்னர், மன்னார் நகர சபையுடன் தொடர்புகொண்டு, தான் சேகரித்தக் கழிவுப்பொருட்களை அகற்றிச் செல்லுமாறு கோரிக்கை விடுத்தார்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .