2020 நவம்பர் 25, புதன்கிழமை

குரல் பதிவு விசாரணை; 10 பொலிஸ் குழுக்கள்

Editorial   / 2020 ஜனவரி 16 , பி.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் பதிவு தொடர்பில் விசாரணை செய்வதற்கு 10 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

விசாரணைகளின் பின்னர் ரஞ்சன் ராமநாயக்க தொடர்பில் ஒவ்வொரு பிரிவின் அடிப்ப​டையில் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க , எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .