2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

கேரளா கஞ்சாவுடன் குடும்பஸ்தர் கைது

Editorial   / 2017 ஜூலை 15 , பி.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத், ஒலுமுதீன் கியாஸ்

கிண்ணியா, மகரூப் நகர் பகுதியில், கேரளா கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த 43 வயதுடைய குடும்பஸ்தர், திருகோணமலை போதைப்பொருள் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் இன்று மாலை 3 மணியளவில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடமிருந்து, 1 கிலோகிராமும் 350 கிராம் கேரளா கஞ்சா மற்றும் தராசு ஆகியன மீட்கப்பட்டனவென, பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில், தங்களுக்குக் கிடைத்த தகவலையடுத்து மேற்படி நபரைக் கைதுசெய்ததாக, போதைப்பொருள் பொலிஸ் குழுவின் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .