2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

குற்றச்சாட்டுக்கு எதிராக ஐ.தே.க எம்.பிக்கள் முறைப்பாடு

Editorial   / 2018 செப்டெம்பர் 11 , மு.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

.கமல்

ஒன்றிணைந்த எதிரணியினர் நடத்திய பேரணியில் கலந்துகொண்டவர்களுக்கு, ஐ.தே.க உறுப்பினர்களால், நஞ்சு கலந்த பால் பக்கற்றுகள் வழங்கப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமைக்கு எதிராக, மிரிஹான பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ, பிரதி அமைச்சர் நளீன் பண்டார், நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் ஆகியோராலேயே, இந்த முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த 5ஆம் திகதி, ஒன்றிணைந்த எதிரணியினர் ஏற்பாடு செய்திருந்த இந்தப் பேரணியில் கலந்துக்கொண்டிருந்தவர்களுக்கு வழங்கப்பட்ட பால் பக்கற்றுகளை அருந்திய சிலர், திடீரென சுகயீனமுற்ற நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

மறுநாள் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது, குறித்த பால் பக்கற்றுகளில், நஞ்சு கலக்கப்ட்டிருந்தாகவும் இச்சம்வத்துடன், முஜிபூர் ரஹ்மான் எம்.பிக்கு தொடர்புல்லது என்றும், எதிரணியினரால் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

எனவே, இந்தக் குற்றசாட்டை முழுமையாக மறுப்பதாகவும் மேற்படி சம்பவத்தின் பின்னணி குறித்து ஆராய வேண்டும் என்றும் வலியுறுத்தி​​யே, இந்த முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--