Editorial / 2017 ஜூலை 18 , பி.ப. 12:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
(செ.நிரூஜன்)
யாழ்ப்பாணம், கல்வியங்காடு பொதுச்சந்தையில் நிலவிவரும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்காக முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் இன்று (18) முற்பகல் விஜயம் மேற்கொண்டுள்ளார்.
வர்த்தகர்களின் வேண்டுகோளையடுத்து அங்கு விஜயம் செய்த முதலமைச்சர் குறைகளை கேட்டறிந்ததுடன் விரைவில் தீர்வுகளை பெற்றுத் தருவதாகவும் உறுதியுளித்துள்ளார்.
2015 ஆம் ஆண்டு தொடக்கம் மாநகர சபைக்கு முறையிட்டும் உரிய வசதி செய்து தரப்படவில்லையெனவும், மலசலகூட வசதிகள் சீரின்மை, உரிய முறையில் சந்தையை சுத்தப்படுத்துவதில்லை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சருக்கு வர்த்தகர்கள் எடுத்துக் கூறினர்.
இதனையடுத்து அங்கு நிலவும் குறைபாடுகளை சீர்செய்வது தொடர்பில் 3 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு அதிகரிகளுக்கு முதலமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago