2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

கொலைச்சம்பவம் தொடர்பில் முன்பள்ளி ஆசிரியை கைது

Editorial   / 2020 ஜனவரி 13 , பி.ப. 01:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனமல்வில, சமாதிகம பிரதேசத்தில் கடந்த 10ஆம் திகதி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு கொலை செய்யப்பட்ட நபரின் சடலமொன்று மீட்கப்பட்டிருந்தது.

தலையில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு குறித்த நபர் கொலை உயிரிழந்துள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்திருந்தது.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்த நபருடன் தொடர்பு வைத்திருந்த முன்பள்ளி ஆசிரியை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் இருந்து சிதைக்கப்பட்ட நிலையில் அலைபேசி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவர் வெல்லவாய நீதிமன்றில் நேற்று (12) முன்னிலைப்படுத்தப்பட்டு இன்று (13) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .