2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

கல்முனை பிரதேசத்தின் வீடொன்றிலிருந்து பெருந்தொகையான ஆயுதங்கள் மீட்பு

Super User   / 2010 ஜூன் 05 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்முனை, பாண்டிருப்பு பகுதியில் வீடொன்றிலிருந்து பெருந்தொகையான ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாள் பிரசாந்த ஜெயகொடி தமிழ்மிரர் இணையதளத்திற்கு தெரிவித்தார்.

அம்பாறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து பாண்டிருப்பு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வலைப்பு நடவடிக்கையின் போதே ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்த ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்கள் உரப்பைக்குள் வைத்து புதைக்கப்பட்டிருந்த நிலையிலேயே கண்டு பிடிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இதன் போது சந்தேகத்தின் பேரில் அவ்வீட்டு உரிமையாளர் 40 வயதான பெண் கைது செய்யப்பட்டு கல்முனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளர்.

இது சம்பந்தமான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.(R.A)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--