2020 செப்டெம்பர் 18, வெள்ளிக்கிழமை

கல்முனை மாநகரசபை முதல்வர் பதவி மசூர் மெளலானாவுக்கு கிடைக்காது?

Super User   / 2010 மே 10 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்முனை மாநகர சபையின் முதல்வராக யாரை நியமிப்பது என்பது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸால் இதுவரையில் யாரும் தீர்மானிக்கப்படவில்லை என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளரிடமிருந்து தமக்கு கடிதமொன்று கிடைக்கப்பெறும் வரையில் காத்திருப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹஸன் அலி தெரிவித்தார்.

மேற்படி கடிதம் கிடைக்கப்பெறும் பட்சத்திலேயே தமது கட்சி உறுப்பினர்களில் யாரை மாநகர சபையின் முதல்வராக நியமிப்பது என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.  

கல்முனை மாநகரசபையின் முன்னாள் மேயராக இருந்த எச்.எம்.எம்.ஹரிஸ், நாடளுமன்றம் தெரிவு செய்யப்பட்டதை அடுத்து குறித்த மாநகரசபையின் மேயர் பதவியில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி றகிப்பை கல்முனை மாநகர சபையின் முதல்வராக நியமிக்குமாறு கட்சித் தலைமைத்துவத்திடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, மாநகர மேயராக மசூர் மெளலானாவே நியமிக்கப்படுவார் என்று தமிழ்மிரர் இணையதளதிற்கு கடந்தவாரம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹஸன் அலி தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
  


  Comments - 0

 • xlntgson Monday, 10 May 2010 10:02 PM

  முதல்வர் கிடைக்கா விட்டால் முதல்வியாவது இல்லையா, பேரியல் எப்படி?

  Reply : 0       0

  farhath Tuesday, 11 May 2010 12:48 AM

  மசூர் மௌலானாவின் பாவம் சும்மா vidaathu.

  Reply : 0       0

  mohamed Tuesday, 11 May 2010 10:24 PM

  இனி வருபவர் யாராக இருந்தாலும் சரி இனியாவது மக்களுக்கு நல்லது நடக்கட்டும் அரசியல் மேடை பேச்சு இனி போதும்

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--