2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

கலஹா வைத்தியசாலை ஒரு மாதத்தில் திறக்கப்படும்

Editorial   / 2018 செப்டெம்பர் 17 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 28ஆம் திகதியிலிருந்து மூடப்பட்டுள்ள கலஹா வைத்தியசாலையைத் மீண்டும் திறப்பதற்கு 1 மாதம் காலம் தே​வையென மத்திய மாகாண சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 28ஆம் திகதி கலஹா பிரதேசத்தைச் சேர்ந்த ஒன்றரை வயது குழந்தை கலஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததையடுத்து, ஆத்திரமடைந்த பிரதேசவாசிகள் வைத்தியசாலை சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததுடன், குறித்த வைத்தியசாலையின் வைத்தியரையும் தாக்க முயற்சித்தனர்.

இதனையடுத்து, வைத்தியசாலை காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளதுடன், வைத்தியசாலையை மீளத் திறக்குமாறு கோரி, நேற்றைய தினம் கலஹா நகரில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

எனினும் வைத்தியசாலையின் சொத்துக்கள் சேதமடைந்துள்ளதால், அவற்றை சீர்செய்யும் நடவடிக்கைகள் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், ஒரு மாத காலப்பகுதிக்குள் வைத்தியசாலையை மீண்டும் வழமைப் போல் திறப்பதற்கு எதிர்பார்ப்பதாக, மத்திய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சாந்தனி சமரசிங்க தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X