2021 ஏப்ரல் 12, திங்கட்கிழமை

களுத்துறை சூடு: சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

Editorial   / 2017 மே 24 , பி.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

களுத்துறையில் இடம்பெற்ற சிறைச்சாலை பஸ் மீதான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட ஒன்பது சந்தேகநபர்களும், தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.  

களுத்துறை பிரதம நீதவான் நீதிமன்ற நீதவான் ரி.விஜயரட்ன முன்னிலையில், இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சந்தேகநபர்களை அடுத்த மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.  

பிரதிவாதிகள் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டத்தரணிகள், சந்தேகநபர்களுக்கு பிணை வழங்குமாறு கோரிக்கை விடுத்த போதிலும், அதனை நீதவான் நிராகரித்தார்.

களுத்துறை சிறைச்சாலை பஸ் மீதான தாக்குதலில், பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த சமயன் என அழைக்கப்படும் அநுர தமித் உதயங்க உள்ளிட்ட ஐந்து சந்தேகநபர்களும் இரண்டு சிறைச்சாலை உத்தியோகத்தர்களும் கொல்லப்பட்டிருந்தனர்.  

கடந்த பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி, கடுவல நீதவான் நீதிமன்றத்துக்கு, சந்தேகநபர்களை அழைத்துவந்த பஸ் மீதே, இனந்தெரியாத நபர்கள், துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றிருந்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .