2025 ஜூலை 12, சனிக்கிழமை

களனியில் காணாமல்போன சிறுமி பொலிஸாரால் கண்டுபிடிப்பு

Super User   / 2010 மே 11 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

களனிப் பிரதேசத்தில் காணாமல்போன இரண்டரை வயது  சிறுமி, கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் பேச்சாளர் பிரஷாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

குறித்த சிறுமி மற்றுமொரு பெண்மணியுடன் முச்சக்கர வண்டியில் இருந்தபோதே கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

இவரது பெற்றோர் மேற்படி சிறுமியை அடையாளம் காட்டுவதற்காக மாரவில பகுதிக்கு சென்றுகொண்டிருக்கின்றனர்.

கடந்த 9ஆம் திகதி குறித்த சிறுமி களனிப் பிரதேசத்திலுள்ள விகாரைக்கு மத வழிபாடுகளில் ஈடுபடும் பொருட்டு, தனது பெற்றோருடன் சென்றிருந்தார். இந்நிலையிலேயே  சிறுமி காணாமல் போயுள்ளார். 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .