2021 ஜனவரி 24, ஞாயிற்றுக்கிழமை

காளான் உட்கொண்ட மூவருக்கு பாதிப்பு

Editorial   / 2019 நவம்பர் 22 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

காட்டில் முளைத்த காளானை உட்கொண்டவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் உட்பட மூவர், பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம், மீகஹகிவுல பிரதேத்தில் இடம்பெற்றுள்ளது. வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டோரில், 69 வயதான பெண்ணும் அடங்குகின்றார். ஏனைய இருவரும், 75 மற்றும் 45 வயதுகளை உடையவர்கள் ஆவார்.

காட்டிலிருந்து பிடுங்கிக்கொண்டு வந்த அந்த காளானை சமைத்து, உட்கொண்டதன் பின்னர், அவர்களுக்கு வாந்தி, வயிற்றோட்டம், வயிற்றுவலி, குமட்டல் மற்றும் சோர்வு, மயக்கம் ஏற்பட்டுள்ளன. அதனையடுத்தே, அவர்கள் அனைவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .