Princiya Dixci / 2016 ஜூலை 19 , மு.ப. 05:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

சிறுவனதும் யுவதியினதும் சடலங்கள் மீட்பு
களனி கங்கையின் ஹங்வெல்லப் பகுதியில் நேற்று (18) குளித்துக்கொண்டிருந்த வேளை காணாமல் போன சிறுவனும் யுவதியும் இன்று செவ்வாய்க்கிழமை (19) சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
ஹங்வெல்லப் பகுதியைச் சேர்ந்த சச்சின் சிந்தக்க (வயது 16) மற்றும் ஐ.ஏ.சுதார (வயது 19) ஆகியோரே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
முந்திய செய்தி
களனி கங்கையின் ஹங்வெல்லப் பகுதியில் நேற்று திங்கட்கிழமை (18) குளித்துக்கொண்டிருந்த 16 வயது சிறுவனும் 19 வயது யுவதியும் காணாமல் போயுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு காணமல் போயுள்ள இருவரும், ஹங்வெல்லப் பகுதியை வசிப்பிடமாகக் கொண்டவர்கள் என்றும் இவர்களைத் தேடும் நடவடிக்கையில் கடற்படை சுழியோடிகள் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
41 minute ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
7 hours ago