2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

குளோபல் தலைமைத்துவ விருதுகளை வென்றெடுத்த பேஜ்,அமலியன்,அனுபம்

Super User   / 2010 ஜூன் 04 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

கார்கில்ஸ் சிலோன் லிமிடெட்டின் தலைவர் ரஞ்சித் பேஜ், மாஸ் ஹொல்டிங் நிறுவனத்தின் தலைவர் மகேஷ் அமலியன் மற்றும் பொலிவுட் நடிகரான அனுபம் கேர் ஆகியோர், CNBC - IIFA  குளோபல் தலைமைத்துவ விருதுகளை வென்றுள்ளனர். இந்த விருதுகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களுக்கு வழப்ங்கி கெளரவித்தார்.

சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவின் சர்வதேச வர்த்தக சங்க மாநாடு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று காலை, கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் ஆரம்பமானது. இதன்போதே குறித்த விருதுகள் பரிந்துரக்கப்பட்டு கையளிக்கப்பட்டதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்தது.

இந்நிகழ்வின்போது கருத்து தெரிவித்த்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவின் சர்வதேச வர்த்தக சங்க மாநாடு இலங்கையில் நடத்தப்படுவதால், இலங்கையின் வர்த்தக, உல்லாசப்பயணத்துறை மற்றும் முதலீடுகளில் பெரும் முன்னேற்றம் ஏற்படும் என்று கூறியுள்ளார்.

இதன்போது பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, மத்திய வங்கி ஆளுநர் அஜிட் நிவாட் கப்ரால், இந்தியத் தூதுவர் அஷோக் கே.காந்தா, இந்திய நாடாராளுமன்ற உறுப்பினர் சஷி தரூர் உட்படப் பலர் இதில் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--