2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

’கிழங்கு இறக்குமதிக்கு தடைவிதிக்கவும்’

Editorial   / 2018 செப்டெம்பர் 13 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

உருளைக்கிழங்கு இறக்குமதியை முற்றுமுழுதாகத் தடைசெய்யுமாறு கோரியுள்ள வெலிமடை - ஊவா பரணகம கூட்டுறவு விவசாயிகள் சங்கத்தின் பிரதிநிதிகள், உள்ளூர் உற்பத்திக்கு முக்கியத்துவம் வழங்குமாறும் வலியுறுத்தியுள்ளனர்.

மேற்படி அமைப்பின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர், பதுளை மாவட்ட செயலகத்துக்கு நேற்று (12) சென்றதுடன், பதுளை மாவட்ட செயலாளர் தமயந்தி பரணகமவைச் சந்தித்து, இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர்.

உருளைக்கிழங்கு இறக்குமதியைத் தடைசெய்வதுடன், உள்ளூர் உருளைக்கிழங்கு கிலோகிராம் ஒன்றுக்கு, 100 ரூபாய் நிர்ணய விலையை வழங்குமாறும் கோரி, மேற்படி சங்கத்தின் உறுப்பினர்கள், வெலிமடை நகரில் நேற்று முன்தினம் (11) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதன் அடுத்தகட்ட நகர்வாகவே, மேற்படி அமைப்பினர், பதுளை மாவட்ட செயலாளரைச் சந்தித்து, இக்கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

இதற்குப் பதிலளித்த மாவட்ட செயலாளர், இவ்விடயத்தைச் சம்பந்தப்பட்ட அமைச்சின் கவனத்துக்குக் கொண்டு செல்வதாக உறுதிமொழி வழங்கியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--