2025 ஜூலை 02, புதன்கிழமை

கொழும்பில் திட்டமிட்டபடி சர்வதேச இந்திய திரைப்பட விழா-சபாஸ் ஜோசப்

Super User   / 2010 மே 30 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச இந்திய திரைப்பட விழா திட்டமிட்டபடி கொழும்பில் நடைபெறும் என விழா ஏற்பாட்டுக் குழுவான விஸ்கிராப்ட்டின் பணிப்பாளர்களில் ஒருவரான சபாஸ் ஜோசப் தெரிவித்தார்.

எக்காரணத்தைக் கொண்டும் திரைப்பட விழா இடமாற்றம் செய்யப்பட மாட்டாது எனவும்  அவர் கூறினார்.

அடுத்த மாதம் 3ஆம் திகதி முதல் 5ஆம் திகதி வரையில் சர்வதேச இந்திய திரைப்பட விழா நடைபெறும் எனவும்  சபாஸ் ஜோசப் குறிப்பிட்டார்.
 
தமிழக திரைப்படத் துறையினரின் அழுத்தம் காரணமாக திரைப்பட விழாவினை வெறொரு இடத்திற்கு இடமாற்றம் செய்ய தீர்மானித்திருப்பதாக வெளியான செய்தியில் உண்மையில்லை என்பதை மறுத்துள்ள சபாஸ் ஜோசப், எந்தவிதமான அழுத்தங்களும் பிரயோகிக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில், திட்டமிட்டபடி சர்வதேச இந்திய திரைப்பட விழா கொழும்பில் நடைபெறும் எனவும் சபாஸ் ஜோசப் குறிப்பிட்டார்.
 
 
 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .