2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

கொழும்பு கழிவுநீர் காண்களை உடனடியாக சீர் செய்ய பாதுகாப்பு செயலாளர் உத்தரவு

Super User   / 2010 மே 18 , பி.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு நகரிலுள்ள கழிவுநீர்க் காண்களை உடனடியாக சீர் செய்யுமாறு பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ, கொழும்பு மாநகரசபை ஆணையாளருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சிறு மழைக்கேனும் கொழும்பிலுள்ள மேற்படி கழிவுநீர்க் காண்கள் வழிந்தோடுவதாலேயே நகரின் பல பகுதிகளில் வெள்ளநீர் தேங்கி நிற்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் தொடர்ந்து பெய்துவரும் கடும் கழை காரணமாக கொழும்பு, கம்பஹா, காலி, களுத்துறை, புத்தளம், நுவரெலியா மற்றும் திருகோணமலை ஆகிய ஏழு மாவட்டங்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனால் வெள்ளம், சூறாவளி, மண்சரிவு போன்ற அனர்த்தங்களால் சுமார் இரண்டு இலட்சம் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இடர் முகாமைத்துவ அமைச்சு தெரிவித்தது.

இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான நிவாரண உதவிகளை வழங்குவதற்காக 122 இலட்சம் ரூபா கையளிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ அமைச்சர் ஏ.எச்.எம்.பெளஸி தெரிவித்தார்.

இந்த நிதியானது மாவட்ட செயலாளர் மற்றும் பிரதேச செயலாளர்களினூடாக குறித்த மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.

  Comments - 0

  • xlntgson Wednesday, 19 May 2010 09:08 PM

    முகத்துவாரத்தில் கடல்வழியாக கரும்புலித்தவளைகள் நுழைந்துவிடுவார்கள் என்று அடைத்து வைத்த அகழ்களை திறந்து விட்டால் போதும். மற்றவை பெரிய விடயங்கள் அல்ல என்றாலும் வடிகான்களில் தடுக்கும் ஊத்தைகளை மழைபெய்துகொண்டு இருக்கும்போதே அப்புறப்படுத்தும் ஊழியர்கள் தேவை, அல்லாமல் பொலிதீன் பாவனையையே தடைசெய்யவேண்டியது வரும். தினசரி ஊத்தை எடுக்கவசதி இல்லாவிட்டால் மழை நாட்களிலாவது அவ்வசதி இருக்கவேண்டும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .