2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

கொழும்பு மாநகரசபை கலைக்க ஏற்பாடு

Super User   / 2010 ஜூன் 22 , மு.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு மாநகரசபை இன்று நள்ளிரவு கலைக்கப்படவுள்ளதாக  நம்பத்தகுந்த வட்டாரங்கள் தமிழ்மிரர் இணையதளத்திற்கு தெரிவித்தன.

இது தொடர்பாக தமிழ்மிரர் இணையதளம் கொழும்பு மாநகரசபையின் பிரதம நிர்வாக அதிகாரி ஒமர் காமிலுடன் தொடர்பு கொண்டு வினவியது.

கொழும்பு மாநகரசபை கலைக்கப்படுவதை உறுதிப்படுத்திய ஒமர் காமில், தான் தொடர்ந்து மாநகர பிரதம நிர்வாக அதிகாரி செயற்படுவதாகவும்  தெரிவித்தார்.

இதேவேளை, கொழும்பு மாநகரசபைக்கு விசேட ஆணையாளர் ஒருவர் நியமிக்கப்பட்டு, அவரது கண்காணிப்பின் கீழ் மாநகரசபையின் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்று மேல் மாகாண  முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.(R.A)


  Comments - 0

 • Ossan Salam - Qatar Tuesday, 22 June 2010 07:53 PM

  இப்பொழுது தான் தமக்கு ஓரளவு நிம்மதிப் பெருமூச்சுவிட முடிந்திருப்பதாக பச்சைக்காரர்கள் நினைக்கலாம். ஆயினும் மீண்டும் தமது வேட்பு மனுவில் எண்ணெய்யை ஊற்றிக் கொள்வார்களோ அல்லது தலையில் மண்ணைப் போட்டுக்கொள்வார்களோ தெரியவில்லை....கொழும்பு மாத்திரம் பச்சையாக மாறுவதால் என்ன பிரயோசனம்... தமது தலைமைத்துவத்திட்கு கிடைத்த மாபெரும் வெற்றி என ரணிலார் வெற்றி பெற்ற பின்னர் மாத்திரம் கொக்கரிப்பார் அவ்வளவு தான் !! பாவம் இவர்களுக்கு இந்த அதிகாரமாவது கிடைக்கட்டும் ஜனநாயக நாடு அல்லவா ?

  Reply : 0       0

  xlntgson Tuesday, 22 June 2010 09:52 PM

  ஐ.தே.க அவ்வளவு எளிதில் வென்று விட இயலாது, சென்றமுறை இக்கட்சிக்காக பாடுபட்ட துமிந்த சில்வா ஆசாத்சாலி போன்றவர்கள் இப்போது ஆளும்தரப்பில் இணைந்து இருக்கின்றனர். ஐ.தே.க வெல்வது ஆளும்தரப்புக்கு உரம் சேர்க்கும் கொழும்பு எப்போதும் அப்படித்தான் என்று! மற்ற எல்லா மாவட்டங்களிலும் அவர்களது வெற்றி உறுதிப்படும். கொழும்பு & மற்ற எல்லா கிராம நகரங்கள் ஒரேமாதிரி வாக்களிப்பதில்லை கொழும்புக்கு கிரி கிராமத்துக்கு கெகிரி என்பது (கொழும்புக்கு பால் கிராமத்துக்கு கசப்பானகிழங்கு வெள்ளரிக்காய் போல்) பிரபல சிங்கள கூற்று.

  Reply : 0       0

  s k gunarasa Tuesday, 22 June 2010 11:42 PM

  என்ன தான் செய்தாலும் வெல்வது ஐ.தே.க என்பது உறுதி !!!!!!

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--